Saturday, July 6
Shadow

Tag: இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் அரோள் கரோலி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அரோள் கரோலி என்பவர் ஒரு இந்திய இசையமைப்பாளர். இவர் மிஷ்கின் இயக்கி பாலாவின் பீ ஸ்டுடியோ தயாரித்த பிசாசு (2014) படத்திற்கு இசையமைத்தார். சினிமா துறையில் அருள் எனப் பலர் இருப்பதால் இயக்குநர் மிஷ்கின் அரோள் என இவருக்கு பெயரைமாற்றினார். அருளைக் கவர்ந்த இசைக் கலைஞர்களில் முதன்மையானவர் இத்தாலிய வயலின் இசை மேதை கரோலி. ஆகவே அவர் பேரையும் தன் பெயரோடு இணைத்துக்கொண்டார். அருள் முருகன் என்ற இயற்பெயர் கொண்ட அரோள் கரோலியின் பூர்வீகம் தேனி மாவட்டம் என்றாலும் வளர்ந்தது சென்னை மறைமலை நகரில். இவர் தன் ஐந்து வயதில் கர்நாடக சங்கீதத்தில் வயலின் வாசிக்க சிறி ரவிக்குமாரிடம் கற்கத்துவங்கினார். 12 வயதில் ஏ. கன்யாகுமாரியிடமும் வயலின் கற்றார். ஆசிரியர் சென்ட் பீட்டரிடம் மேற்கத்திய இசையில் பியானோ கற்றுக்கொள்ளவும் ஆரம்பித்தார். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும், இசை ஆர்வத்தின் காரணமாக மேற்கொண்டு படிக்க விரும்பவில்ல...

இசையமைப்பாளர் எம். பி. சீனிவாசன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எம். பி. சீனிவாசன் தமிழ், மற்றும் மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர். பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஒரு மார்க்சியவாதி. திரையுலகிலும் கம்யூனிஸ்ட் இயக்க வட்டாரத்திலும் அவர் "எம்.பி.எஸ்" என்று பிரியத்துடன் அழைக்கப்பெற்றார். 1962இல் வெளிவந்த "கால்படுகள்" என்ற மலையாளப் படத்திற்காக இசையமைத்ததே இவரது முதல் பாடல். எம்.பி.எஸ், 1925இல் பாலகிருஷ்ணன் என்ற என்பவருக்கு மகனாக பிறந்தார். சங்கீத வித்துவானாகிய தாயிடமிருந்து இசையைக் கற்றார். கம்யூனிஸ்ட் தலைவராகிய தன் சிறிய தந்தையிடமிருந்து அரசியல் கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர் சீனிவாசன். அப்போது விடுதலைப் போராட்டப் பொதுக் கூட்டங்களில் பாரதியார் பாடல்களைப் பாடி வந்தார். தமிழகத்தில் கம்யூனிச சார்புள்ள மதராஸ் மாணவர் அமைப்பு தோன்றியது. சீனிவாசன் இந்த அமைப்பில் இணைந்தார். மாணவர் இயக்கப் பணிகளுக்காக இந்தியா முழுக்க அலைந்து திரிந்த சீனிவாசன் அதே இல...

இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
குன்னக்குடி வைத்தியநாதன் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. 1935 இல் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடியில் இராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12 ஆவது அகவையிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார். ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அம...

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
யுவன் சங்கர் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது திரைப்படமாகும். இவர் இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறினார். 2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு சுஜன்யாவிடமிருந்து விவாகரத்து செய்தார். 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பதியில் ஷில்பா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.[4] ஷில்பாவை விவாகரத்து செய்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்று அன்று ஜபருன்னிசாவைத் திருமணம் செய்தார்....

இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எஸ்.ஏ. ராஜ்குமார் என்பவர் தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி ஆகிய பல தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். செ. ஏ. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த செல்வராஜன் மற்றும் கண்ணம்மாள் அவர்களுக்கு ஆகஸ்ட் 23, 1964 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரது குடும்ப முன்னோர்கள் திருநெல்வேலி மாவட்டம், பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தை ஒரு மேடைப் பாடகர் ஆவர். இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். ராஜ்குமாருக்கு தனது தந்தையின் இசை வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜ்குமார் சுப்பையா பாகவதரின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய இசையை முறையாக மூன்று ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார். இவர் இசையமைத்த தமிழ் படங்கள்: சின்னப்பூவே மெல்லப்பேச...

இசையமைப்பாளர் வெ. தட்சிணாமூர்த்தி மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி ஒரு கருநாடக இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 1948ல் வெளிவந்த 'நல்லதங்காள்' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், அருமை மகள் அபிராமி, உலகம் சிரிக்கிறது, எழுதாத கதை போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் இளையராஜா, பி.சுசீலா, யேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்த...

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர். இவருடைய இசை பிறமொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் இசையமைத்த படங்கள்: வினய விதேய ராமா, சாமி 2, செல்வந்தன், புலி, வீரம், பிரம்மன்

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சாம் சி எஸ் இந்திய திரைப்பட இசையமைப்பாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் ஆவார். இவரது பூர்வீகம் கேரளாவை சேர்ந்த மூணார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் இதுவரை பாடல்களை பாடியுள்ளார். இவர் இசையமைத்த படங்கள்: கண்ணை நம்பாதே, கைதி கசட தபற, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், அயோக்யா, கே-13, ஜடா, ராஜ வம்சம், கொரில்லா, 100, கடிகார மனிதர்கள், வஞ்சகர் உலகம், அடங்க மறு, இரவுக்கு ஆயிரம் கண்கள், கேணி, லக்ஷ்மி, நோட்டா, தியா, Mr. சந்திரமௌலி, விக்ரம் வேதா, புரியாத புதிர், கடலை...

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விஜய் ஆண்டனி இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். விஜய் ஆண்டனி தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயது இருக்கும் போது இறந்து விட்டார். விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார். அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது. இவரது அண்மைய திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்கார...

இசையமைப்பாளர் ம. சு. விசுவநாதன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் அல்லது பொதுவாக எம்எஸ்வி, தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி), விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்....