Monday, July 1
Shadow

“கல்கி 2898 AD” – திரைவிமர்சனம் (புதுமை) Rank 4/5

 

 

 

பிரபாஸ் படங்கள் என்றாலே கண்டிப்பாக புதுமை இருக்கும் இந்த படத்தில் பல புதுமைகள் இருக்கு ஒரு சில விஷயம் சொன்னால் அதில் கிக் இருக்காது அதை அனுபவித்தாள் தான் அந்த கிக் சுவை தெரியும் இந்த படத்தில் அப்படி ஒரு கிக் உங்களுக்கு காத்து இருக்கிறது. கல்கி பெயரிலே ஒரு மிக பெரிய ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது .அது நிச்சயம் உங்களுக்கு இந்த படத்தில் இருக்கு மிக பிரமாண்ட படம் இந்தியாவின் மிக பிரமாண்ட நடிகர்கள் இணைந்து நடிக்கும் படம் “கல்கி 2898 AD”

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, ஷோபனா, பசுபதி, பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “கல்கி 2898 AD”.இந்த படத்தை நடிகையர் திலகம் என்ற படத்தினை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் DJORDJE STOJILJKOVIC. மேலும், இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். வைஜேந்தி மூவிஸ் சாரிபில் அஸ்வினி தத் தயாரித்திருக்கிறார்.

கதைக்குள் போகலாம் …

மகாபாராத போரில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. இக்கதையில், அஸ்வத்மனுக்கு சாபம் விடுக்கிறார் கிருஷ்ணர். இந்த சாபம் நீங்க வேண்டும் என்றால் பல வருடங்கள் காத்திருக்க வேண்டுமென்றும் கூறிவிடுகிறார். அதுவரை அஸ்வத்மனுக்கு அழிவில்லை என்றும் கூறி விடுகிறார்.

சுமார் 6000 வருடங்களுக்குப் பிறகு கதை நகர்கிறது. தற்போது இருக்கும் உலகை விட அட்வான்ஸ் உலகிற்கு நகர்கிறது படத்தின் கதை.

இக்கதையில், பணம் இல்லை, நீர் இல்லை, வான்வழி வாகனங்கள், அடர் பாலைவனமாக பூமி என பார்ப்பதற்கே சற்று வித்தியாசமான உலகை
மகாபாரத போரில் ஆரம்பமாகிறது கல்கியின் கதை. அஸ்வத்மனுக்கு (அமிதாப் பச்சன்) சாபம் விதிக்கிறார் கிருஷ்ணர். சாபத்தை போக்க, கலியுகத்தை காக்க மீண்டும் தான் அவதரிப்பதாக கூறிவிடுகிறார். அதுவரை அஸ்வத்மனுக்கு அழிவு இல்லை என்றும் கூறுகிறார்.

அதன்பிறகு, 6000 வருடத்திற்குப் பிறகு கதை நடக்கிறது. அந்த காலகட்டத்தில் தற்போது இருக்கும் உலகை விட அட்வான்ஸாக இருக்கிறது. ஆயுதமாக இருக்கட்டும், பறக்கும் வாகனமாக இருக்கட்டும் என அனைத்தும் வேறு விதமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தண்ணீருக்கே தவிக்கும் மக்கள் இருக்கின்றனர். காசியில் மட்டுமே ஒரு உலகம் இருப்பதாக அனைவரும் அங்கு தங்கி இருக்கின்றனர்.

மேலும், கமல்ஹாசன் உருவாக்கிய சாம்ராஜ்யமாக வானுயர்ந்த நிற்கிறது “காம்ப்ளக்ஸ்”. இந்த காம்ப்ளக்ஸிற்குள் தான் சகலமும் கிடைக்கப் பெறுகிறது, இருக்கிறது. சுத்தமான காற்று, நல்ல உணவு, நீர், பசுமையான சூழல் என அனைத்தும் காம்ப்ளக்ஸில் கிடைக்கிறது.

மேலும், செயற்கை முறையில் பெண்கள் கருவுறுவதற்காக பல பெண்களை சிறைபிடித்து வைத்திருக்கிறார்கள் காம்ப்ளக்ஸை சேர்ந்தவர்கள். 3 மாத கருவின் மூலம் கிடைக்கும் சிரம் ஒன்றை கமல்ஹாசன் தன் உடலில் செலுத்திக் கொள்கிறார். தெய்வீகம் பொருந்திய ஒரு பெண்ணின் கருவில் இருக்கும் சிசுவின் சிரம் தான் தன்னை மேலும் பலமாக்கும் என அந்த பெண்ணை தேடி வருகிறார்கள் கமல்ஹாசன் டீம்…

அந்த பெண் தான் தீபிகா படுகோன். இவரும் காம்ப்ளக்ஸில் தான் இருக்கிறார். கடவுள் பிறக்கப்போகிறார் என அமிதாப்பச்சன் தனது ஞானத்தால் தெரிந்து கொள்ள, அவரைக் காப்பாற்ற குகையில் இருந்து வெளியே வருகிறார்.

உலகை விடியலுக்கு அழைத்துச் செல்வதற்காக கமல்ஹாசன் & கோ’விற்கு எதிராக ஷோபனா, பசுபதி என ஒரு தனி டீமை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

கமல்ஹாசனுக்கு எதிரான இவர்களது போராட்டம் என்னவானது.? பிரபாஸ் இதில் என்னவாக இருக்கிறார்.?? அமிதாப் பச்சன் இக்கதைக்குள் என்ன செய்கிறார்.??? என்பதற்கெல்லாம் விடை இரண்டாம் பாதியில் காட்டியிருக்கிறார்கள்..

நாயகனான ஜொலித்திருக்கிறார் அமிதாப் பச்சன் என்றே சொல்லலாம். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றி ஒட்டுமொத்த கதையின் மூலத்தையும் தாங்கி நிற்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சிகளில் மட்டுமே பிரபாஸின் வீர தீர சாகச ஹீரோயிசம் தென்படுகிறது. பத்து நிமிட காட்சி என்றாலும், அதை திறமையாக கையாண்டிருக்கிறார் கமல்ஹாசன். உலகநாயகனாக இவரது தோற்றமும் அனைவரையும் கவரும். இவரது கதாபாத்திரமும் இரண்டாம் பாகத்தில் தான், பெரிதளவில் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கியின் உலகை புரிந்து கொள்ளவே சிறிது நேரம் எடுத்துக் கொள்வதால், படத்திற்குள் பயணிக்க சற்று சிரமம் என்றாலும், போக போக கதைக்குள் நாம் எளிதாக பயணம் செய்யலாம்.

இரண்டாம் பாதியிலேயே அதிகப்படியான ட்விஸ்ட் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதால் அதுவே பலமாக நிற்கிறது படத்தில்

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் அதிரடி காட்டியிருக்கிறார். தீபிகா படுகோன், ஷோபனா, பசுபதி என மற்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் தங்களது கேரக்டர்களை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.

படத்தில் தென்பட்ட சிஜி காட்சிகள் மிக திறமையாகவே கையாண்டிருக்கின்றனர்.

கல்கி – இந்திய சினிமாவின் புதுமை  Rank 4/5