Thursday, June 27
Shadow

இயக்குனர் லோகேஷ் குமார் பிறந்த தின பதிவு

சென்னையைச் சேர்ந்த லோகேஷ் குமார் இயக்கிய படம் என் மகன் மகிழ்வன் (My Son Is Gay). ஆண் ஓரின ஈர்ப்பு பற்றித் தமிழில் எடுக்கப்பட்டுள்ள முதல் படமாகும்.

மகிழ்வனான ஒருவன் தன்னிலையை வெளிப்படுத்தியபோது சந்திக்கும் போரட்டங்களைப் பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. தன்னை அவன் வெளிப்படுத்திய பின்னர் அவனது தாய் மற்றும் அவனைச் சுற்றி வாழும் மற்றவர்களுடான உறவு எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை இத் திரைப்படக் கதை விளக்குகிறது.

சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மையினரும், பெரும்பான்மை சமுதாயத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மரியாதையுடன் வாழ்வதற்கு உரிமையுள்ளவர்கள் என்பதை வலியுறுத்தும்வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது இந்திய உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. உலகின் பல்வேறு திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், நடுவர் குழுவால் இப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது.

இவர் இயக்கிய படம்: காசிமேடு